திருவள்ளூர் மகாலட்சுமி மூல மந்திர யாகம்
ADDED :2385 days ago
திருவள்ளூர் :திருப்பாச்சூர், காமேஸ்வரர் சமேத லலிதா மகா திரிபுரசுந்தரி கோவிலில், 19ம் தேதி, மகாலட்சுமி மந்திரயாகம் நடைபெறுகிறது.
திருவள்ளூர் அடுத்த, புதிய திருப்பாச்சூர் குளக்கரை அருகில், காமேஸ்வரர் சமேத லலிதா மகா திரிபுரசுந்தரி கோவில் உள்ளது. இக்கோவிலில், 19ம் தேதி, சித்ரா பவுர்ணமி பெரு
விழா நடைபெறுகிறது.அன்று காலை, 8:00 மணியளவில், விக்னேஸ்வர பூஜை, காலை, 9:30 மணிக்கு, மகாலட்சுமி மூல மந்திர யாகம், 1,008 தாமரைகளால் யாகம் துவங்குகிறது.
மாலை, குபேர பூஜையும், தொடர்ந்து 1,008 லட்டுகளால், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறுகிறது. இரவு, 8.30 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.