உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் 1,008 குங்கும அர்ச்சனை

அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் 1,008 குங்கும அர்ச்சனை

தேவிபட்டினம்: -தேவிபட்டினம் சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் சித்திரை தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு குங்கும அர்ச்சனை, மாங்கல்ய பூஜை உள்ளிட்டவை நடந்தது.

மூலவர் பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. 1,008 லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையில் பெண்கள்  வழிபாடு செய்தனர். அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா ரெத்தினம் பூஜைகளை செய்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர்கள் மற்றும் நிர்வாககமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !