கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்
ADDED :2404 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கீரணிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரமோத்ஸவம் ஏப்.,7 ல் உற்ஸவ அம்மன் இளையாத்தங்குடியிலிருந்து புறப்பாடாகி கோயிலுக்கு எழுந்தருளிய நிலையில் காப்புக் கட்டி துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் இளையாத்தங்குடி திரும்புதலுடன் பிரமோத்ஸவம் நிறைவடைகிறது.