ஆதிகேசவ பெருமாளுக்கு வரும் 19ல் உற்சவ விழா
ADDED :2404 days ago
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் உற்சவ விழா, வரும், 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது.இங்கு, ஆண்டு தோறும் ஆதிகேசவப் பெருமாள் உற்சவம் விழா, 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். இந்தாண்டு ஏப்., 19ம் தேதி, கொடியேற்றத்துடன் உற்சவ விழா துவங்குகிறது.