சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா: நாயன்மார் ஊர்வலம்
ADDED :2404 days ago
அந்தியூர்: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 11ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இந்நிலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு பல்வேறு பூஜை, நேற்று நடந்தது. மாலையில் கோவிலில் இருந்து, 63 பல்லக்கில், 63 நாயன்மார்களை சிவனடியார்கள் தோளில் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். ஏராளமான மக்களும் பங்கேற்றனர். இதனால் கூடுதுறை விழாக்கோலம் பூண்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், 19ல் நடக்கவுள்ளது.