உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் கூலிங் பெயின்ட் அடிக்கும் பணி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கூலிங் பெயின்ட் அடிக்கும் பணி

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்கள் வெயிலில் நடந்து செல்ல வசதியாக, வெளிப்பிரகார தரையில் கூலிங் பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு, வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பகுதி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தினமும் வருகின்றனர்.

கோடை விடுமுறையான தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோடை வெயில் சுட்டெரிப்பதால் கோவிலின் வெளி பிரகாரத்தில் கருங்கற்கள் சூடாகி பக்தர்கள் காலை பதம் பார்க்கிறது. இதனால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதை கருத்தில்கொண்டு, பக்தர்கள் வசதிக்காக, கோவில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் கூரைகள் அமைக்கப்பட்டது. தரை விரிப்புகள் போடப்பட்டது.தற்போது, கீழ வீதி ராஜ கோபுரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி மற்றும் மேற்கு புற வெளி பிரகாரத்தில் வெயில் சூட்டை தணிக்க,கூலிங் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !