உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் முத்தாளம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

கிருஷ்ணராயபுரம் முத்தாளம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, மழை பெய்ய வேண்டி, முத்தாளம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்து, கிராம மக்கள் வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த
மகிளிப்பட்டியில் முத்தாளம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், மழை வேண்டி அப்பகுதி மக்கள் சார்பில், நேற்று (ஏப்., 16ல்)காலை, அம்மனுக்கு புதிய, 10 ரூபாய் நோட்டுகளால், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டார
பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !