ஓமலூர் குஞ்சு மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்
ADDED :2409 days ago
ஓமலூர்: குஞ்சு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம், ஓமலூர் நகரிலுள்ள, குஞ்சு மாரியம்மன் கோவில் கோபுரம், உட்பிரகாரம், கொடி மரம், சிலைகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. கடந்த, 31ல், முகூர்த்தகால் நடப்பட்டு, கடந்த, 15ல், கணபதி ஹோமம், நேற்று முன்தினம் (ஏப்., 16ல்), தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று (ஏப்., 17ல்) காலை, 9:00 மணிக்கு, மூலஸ்தன கோபுர கலசத்துக்கு, சிவாச்சாரியார்கள் புனித நீரூற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
அதில், திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். இதையொட்டி, மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.