காரிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி முருகன், வள்ளி சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கும்பாபிஷேக விழா நேற்று 17ம் தேதி நடந்தது.
இக்கோவிலில், கடந்த, 15ல், காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் (ஏப்., 16ல்) காலை, 10:00 மணிக்கு, தீர்த்தக்குடம், பால்குடம், முளைபாரி ஊர்வலம் நடந்தது. நேற்று (ஏப்., 17ல்), காலை, 5:30 மணிக்கு, கணபதி, நவக்கிரஹம், சர்வ தேவதா போன்ற கலச
பூஜைகள் நடந்தன. இரவு, 11:30 மணிக்கு மேல், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோபுர கலசம், யந்திர ஸ்தாபனம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் அஸ்ட பந்தனம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று (ஏப்., 17ல்), காலை, 10:00 மணிக்கு மேல், இக்கோவில் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய
சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை சோடச உபசாரபூஜை நடந்தது. 11:00 மணிக்கு மேல், முளைபாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கங்கைபூஜை
நடந்தது. இன்று காலை, 8:00 மணி முதல், தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.