உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பூளவாடி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

உடுமலை பூளவாடி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

உடுமலை:பூளவாடி, அன்பிற்பிரியாள் அம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பூளவாடியில் மதுரைவீரன் வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் மற்றும் அன்பிற் பிரியாள் அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் மருதவாணேஸ்வரர் அன்பிற்பிரி யாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று (ஏப்., 18ல்) நடந்தது.  காலை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

காலை, 8:30 மணிக்கு பக்தர்கள் கல்யாண சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை, 10:00 மணிக்கு மணக்கோலத்துடன், அன்பிற்பிரியாள் உடனமர்
மருதவாணேஸ்வரர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் ஆரம்பமாகி, மருதவாணேஸ்வரர் சுவாமிகள், அன்பிற்பிரியாள் அம்பாளுக்கு மாங்கல்ய தாரணம் செய்தார்.

திருமணக்கோலத்துடன் சுவாமிகளுக்கு மகாதீபாராதனை மற்றும் ஆரத்தி எடுக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிறைவாக,
மகேஸ்வர பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !