உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பூர் கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பூர்:திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று (ஏப்., 18ல்)துவங்குகிறது. இன்று (ஏப்., 18ல்) காலை, கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, தீபாராதனையும், நாளை (ஏப்., 19ல்) முதல் கால யாக பூஜை துவங்கி நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு அணைப்பாளையம் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் முளைப்பாலிகை, தீர்த்தகுடத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.விழாவில், 21 தேதி, இரவு, 8:00 மணிக்கு மருந்து சாத்துதல், 8:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 22ம் தேதி விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.விழாவையொட்டி, அன்று காலை 7:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !