உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெ.நா.பாளையம் குருவம்மாள் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம் குருவம்மாள் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம், ராவுத்துக்கொல்லனூர் அருகே உள்ள குருவம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் (ஏப்., 16ல்) தீர்த்த கலசபூஜை நடந்தது. முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் குருவம்மாள் கோவில் வந்தடைந்தது. தீப பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, யாகசாலை பிரவேசம் ஆகியன நடந்தன.தொடர்ந்து, 108 கலச ஸ்தாபன திருமஞ்சன பூஜையும் நடந்தன. நேற்று (ஏப்., 17ல்) காலை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜையும், காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.திருமஞ்சனம், தீபாராதனை, சாற்றுமுறை, தீர்த்ததுளசி, சடாரி ஆகிய நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !