உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம்

சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 16ம் தேதி காலை 10.30 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மாலை 5.00 மணிக்கு மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், இரவு 7.00 மணிக்கு கும்பாலங்காரம், முதற்கால யாகபூஜை துவக்கம், இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.நேற்று (17ம் தேதி) காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸபர்ஸாஹூதி, 8.00 மணிக்கு கோ பூஜை, வடுபூஜை, கன்னிகா பூஜை நடந்தது. 9.15 மணிக்கு யாத்ரா தானம், 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.45 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10.00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !