உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கருப்பராயன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

அன்னூர் கருப்பராயன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

அன்னூர்: அன்னூர், கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று 17ல், நடந்தது.அன்னூர் - மேட்டுப்பாளையம் ரோட்டில், பழமையான ஆனைமலை கருப்பராயன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தீர்த்த கிணறு, பெரிய அளவிலான யானை சுதை ஆகியவை உள்ளன. இக்கோவிலில், கேரள பாணியில் மேற்கூரை அமைத்து, திருப்பணி செய்து, பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஏப்., 16ல்) துவங்கியது.மாலையில், விநாயகர் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று (ஏப்., 17ல்) அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. யாகசாலையிலிருந்து, புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்து வரப்பட்டு, காலை 9:40 மணிக்கு வேம்பரசு விநாயகர், ஆனைமலை கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் கருப்பராயருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 2,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் ராஜேந்திரன் உள்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !