அன்னூர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா
அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் கம்பம் நடப்பட்டது.
அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவில், 31ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த, 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 15ம் தேதி வரை தினமும்
மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம் (ஏப்., 16ல்), மாலையில் காப்பு கட்டப்பட்டது. ஓதிமலை ரோட்டிலிருந்து ஊர்வலமாக கம்பம் கொண்டு வரப்பட்டு,
கோவிலில் நடப்பட்டது. பக்தர்கள் பூவோடு எடுத்தனர். அன்னூர், குமாரபாளையம் உட்பட சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.இன்று (ஏப்., 18ல்) இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. வரும், 22ம் தேதி இரவு அணிக்கூடை எடுக்கப்படுகிறது. 23ம் தேதி காலையில் சக்தி கரகம் எடுத்தல், அம்மன் அழைப்பு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மாலையில், அம்மன் திருவீதியுலா நடக்கிறது. 24ம் தேதி காலையில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. இரவு கம்பம் கலைக்கப்படுகிறது.