உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி சக்தி கும்பஸ்தானம் செய்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வரும், 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு குண்டம் திறப்பு, மாலை, 4:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு புறப்படுதல், இரவு, 8:00 மணிக்கு அகத்தூர் அம்மன்
தீர்த்தம் கொண்டு வருதல்; இரவு, 9:00 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் பூஜை நடக்கிறது.வரும், 24ம் தேதி காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல், காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு எடுத்தல்; வரும், 26ம் தேதி காலை, 9:00 மணிக்கு சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகம், ஆராதனை பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !