மேட்டுப்பாளையம் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2410 days ago
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் கல்லாற்றில் உள்ள பழப்பண்ணையில் மிகவும் பழமையான முனீஸ்வரன் கோவில் உள்ளது. இது இப்பண்ணையின் காவல் தெய்வமாக
உள்ளது.பண்ணை அலுவர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து முனீஸ்வரன் கோவிலை சீரமைத்து திருப்பணிகள் செய்தனர்.
இக்கோவிலில் யாக பூஜைகள் நிறைவடைந்த பிறகு, நேற்று (ஏப்., 17ல்)காலை, 9:00லிருந்து, 10:00 மணிக்கும் புனித தீர்த்தம் தெளித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இவ்விழாவில் முன்னாள் பண்ணை மேலாளர் பழனிசாமி, அலுவலக ஊழியர்கள் செல்வராஜ், ராஜகோபால், கந்தசாமி உள்பட பணியாளர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோர் பங்கேற்றனர்.