உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி 24ல் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா

பொள்ளாச்சி 24ல் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த, போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில், வரும், 24ம் தேதி, குண்டம் திருவிழா நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்த, போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த, 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று (ஏப்., 17ல்) முதல் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் துவங்கியது. வரும், 23ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மன் சப்பரம் ஊர்வலத்தில் வலம் வருதல், மாலை, 5:00 மணிக்கு தர்மராஜா கோவிலில் பச்சை போடுதல், மாலை, 6:00 மணிக்கு பூ குண்டம் திறப்பும், இரவு, 10:00 மணிக்கு பூ வளர்த்தலும் நடக்கிறது. வரும், 24ம் தேதி காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், மாலையில் மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. வரும், 26ம் தேதி மகா அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டுதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !