வாடிப்பட்டி அருகே மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணம்
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அடுத்த குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 13ம் நாள் நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.
டி.எஸ்.பி.,மோகன்குமார் பங்கேற்றார்.அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஏப்.,18) மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.காடுபட்டிதென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோயில், மன்னாடிமங்கலம், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் திருக்கல்யாணம் நடந்தது.
சோழவந்தான்சோழவந்தான் அக்ரஹாரத்தில் ராமபக்த சபா சார்பில் 47ம் ஆண்டு ராமநவமி மஹோத்ஸவம் 5 நாட்கள் நடந்தன. நேற்று 17ல் காலை 7:00 மணிக்கு உஞ்சவிருத்தி, 10:00 மணிக்கு சீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சீதாராம கல்யாண உற்ஸவம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு சிறப்பு அலங்காரத்தில் சீதாராமர் வீதி உலா நடந்தது.