உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.

சித்திரை திருவிழா ஏப்.8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. திருவிழாவின் பத்து நாட்களும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் 10 ம் திருவிழாவில் அபிராமியம்மனுக்கும் பத்மகிரீஸ்வரர் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !