உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்

நடுவீரப்பட்டு: திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நடைபெற உள்ள தீமிதி திருவிழாவை முன்னிட்டு 17ம் தேதி வியாழக்கிழமை  கொடியேற்றம் நடந்தது. அன்று மாலை 4:00 மணிக்கு விநாயகர்,திரவுபதியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !