உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் தேரோட்ட கோலாகலம்

மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் தேரோட்ட கோலாகலம்

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில் சித்திரை விழாவில் நேற்று (ஏப்.,18ல்) நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 10 ந் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களில் அம்மனும்,சுவாமியும் பல்வேறு
வாகனங்களில்எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

நேற்று (ஏப்., 18ல்) தேரோட்டத்திற்காக சோமநாதர் பிரியாவிடையுடன் பெரிய தேருக்கும், ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.பெரிய தேருக்கு முன்னால் இருந்த சிறிய தேரில் முருகன் வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 10:20 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க துவங்கினர்.தேர் நான்கு ரத
வீதிகளிலும் வலம் வந்து காலை 11:10 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் அம்மனுக்கும், சுவாமிக்கு தீப ஆராதனை நடைபெற்றன.

தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். இன்று (ஏப்., 19ல்) காலை 6:00 மணியிலிருந்து 7:05 க்குள் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !