திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :2409 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நேற்று நடந்தது.திண்டிவனம் திந்திரிணீஸ்வர் கோவில் பிரமோற்சவ விழா 9 ம்தேதி துவங்கியது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு துவங்கியது. நேருவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக நடந்த தேரோட்டத்தை திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ கோஷத்துடன் இழுத்தனர். 12.30 மணியளவில் தேரோட்டம் மீண்டும் கோவிலை அடைந்தது. நாளை 20 ம்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.