நடுவீரப்பட்டு சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு பால்குடம் அபிஷேகம்
ADDED :2410 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று (ஏப்., 19ல்) 306 பால்குட ஊர்வலம் நடக்கிறது.
சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று 19 ம் தேதி சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு 306 பால்குட அபிஷேகம் நடக்கிறது. இன்று (ஏப்., 19ல்) காலை
9:00 மணிக்கு வேழ விநாயகர் கோவிலிருந்து பால்குடங்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து 10:00 மணிக்கு அம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு 306 பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது.