உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் வல்லபி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் வல்லபி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்:சிதம்பரம், வல்லபி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் (ஏப்., 17ல்) நடந்தது.

சிதம்பரம் சுப்ரமணியர் தெருவில் வல்லபி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புதிய நிலை விமான கோபுரத்துடன், விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, பாவாடை ராயன், ஐயப்பன், துர்கை, பைரவர், சப்தகன்னி, நாகர் நவக்கிரகங்கள், பலி பீடம் முதலிய பரிவார தேவதைகளுடன் வல்லபி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 15ம் தேதி கணபதி ஹோமத்துடன்

துவங்கியது.நேற்று முன்தினம் (ஏப்., 17ல்) காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமங்கள், யாத்ராதானம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, புனித நீர்
கலசம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, வல்லபி மாரியம்மன் மூலஸ்தானம், சகல பரிவாரங்களுக்கும்
கும்பாபிஷேம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !