உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சிவன் கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம்

விழுப்புரம் சிவன் கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம்

விழுப்புரம்:விழுப்புரம் பிரஹன்நாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நேற்று (ஏப்., 18ல்)நடந்தது.

விழுப்புரத்தில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. மிகப்பழமையும், பெருமையும் கொண்டு இக்கோவிலை திருமலை நாயக்கர்கள் மேன்மைப்படுத்தினர்.இக்கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 9-ம் தேதி விநாயகர் உற்சவத்துடன் துவங்கியது. 10-ம் நாள் உற்சவமாக நேற்று (ஏப்., 18ல்)காலை 5 மணிக்கு பிரஹன்நாயகி உடனுறை கைலாசநாதர் திருத்தேர் வடம்பிடித்தல் உற்சவம் நடத்தப்பட்டது. தேரோட்ட வைபவத்தினை கோவில் பிரதோஷ பேரவையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !