பெத்தநாயக்கன்பாளையத்தில் மழை வேண்டி தேர் இடம் மாற்றம்
ADDED :2410 days ago
பெ.நா.பாளையம்: மழை வேண்டி, பழமையான மரத்தேரை, வேறு இடத்துக்கு மாற்றி வைத்து, சிறப்பு பூஜை நடந்தது.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பேளூர் கரடிப்பட்டி, மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் (ஏப்., 17ல்), சித்திரை மாதத்தையொட்டி நடந்த சிறப்பு பூஜையில், ஒருவருக்கு
அருள்வாக்கு வந்தது. அவர், கோவில் தேரை, வேறு இடத்துக்கு மாற்றி வைத்தால்தான், மழை பெய்யும் என, தெரிவித்தார்.
இதனால், நேற்று (ஏப்., 18ல்), மதியம், 1:00 மணிக்கு, தேருக்கு பூஜை செய்த பின், ஊர்மக்கள் வடம்பிடித்து, வடக்கிலிருந்து, தெற்கு பகுதிக்கு இழுத்து வந்து, நிலை நிறுத்தினர். பின், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும், ஓம் சக்தி, பராசக்தி என்றும், மழையே
வா என்றும், ஏராளமான பெண்கள் கோஷமிட்டனர்.