பெத்தநாயக்கன்பாளையத்தில் பம்பை மேளத்துடன் சக்தி அழைத்தல் உற்சவம்
ADDED :2410 days ago
பெ.நா.பாளையம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அருகே, செல்லியம்மன் கோவிலில், பம்பை மேளத்துடன், சக்தி அழைத்தல் உற்சவம், நேற்று
(ஏப்., 18ல்)நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, பசு, குதிரை, ஊர்வலத்துடன், பம்பை மேளம் முழங்க, சக்தி கரகம், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஏப்., 19ல்) காலை, 7:00 மணிக்கு பால்குட ஊர்வலம், 9:00 மணிக்கு கணபதி ஹோமம், 11:00 மணிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, சுவாமி கோவிலை வலம் வருதல் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சித்ரா பவுர்ணமி அன்னதான குழுவினர், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.