உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி

நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி

நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், சித்திரை மாத முதல் வியாழனை முன்னிட்டு, சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, சாய்பாபாவிற்கு பல்வேறு வித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நடந்தது.

தொடர்ந்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மதியான் ஆரத்தி எனும் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க பாபாவிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !