பச்சைவாழியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2411 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா, பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீமன்னாத ஈஸ்வரர், பச்சைவாழி அம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது.கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 16ம் தேதி இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சக்தி அழைத்தல், பெண் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம் பகல் 12.30 மணிக்கு முனீஸ்வரருக்கு கண் திறப்பு நிகழ்ச்சி, மதியம் 2 மணிக்கு ரத உற்சவம் நடந்தது. கோவில் பகுதியைச் சுற்றி வலம் வந்த தேரினை பு.கொணலவாடி, மூலசமுத்திரம், நத்தகாளி, ஏமம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.தேரில் மன்னாத ஈஸ்வரர் பச்சைவாழியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தானர்.