புதுச்சேரி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :2654 days ago
புதுச்சேரி: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்தவர்களின் 45 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் (ஏப்., 20ல்) புனித வெள்ளியும் கடைபிடிக்கப்பட்டது.தவக்காலத்தின் நிறைவு நாளான நேற்று (ஏப்., 21ல்), ஈஸ்டர் நிகழ்ச்சி, புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்தது. இதில் இயேசு கிறிஸ்து உயிர்த் தெழும் நிகழ்வு நடந்தது. ஏரளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.