உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில் சிறப்பு திருப்பலி

பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில் சிறப்பு திருப்பலி

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஏசு கிறிஸ்து உயர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த 19ம் தேதி ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஏப்., 20ல்) இரவு 11 மணி அளவில் பங்கு தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா நடந்தது.

திரு முழுக்கு வாக்குறுதிகளை புதுப்பிக்கும் போது கிறிஸ்தவ மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி திருப்பலி துவங்கினர். பின் திரு ஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு, திரு முழுக்கு வழிபாடு தண்ணீர் மந்திரித்தல், திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல், நற்கருணை வழிபாடு ஆகியவை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !