கோபியில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சன்னதி: பச்சமலையில் தொடங்கியது பணி
கோபி: பச்சமலையில், நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, புதிய கோவில் கட்டுவதற் கான, திருப்பணி துவக்கவிழா நடந்தது.
கோபி, பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. அர்த்த மண்டப வளாகத்து க்குள், தேக்குமர கனக சபையில், நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள், பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இரு தெய்வங்களுக்கும், தனியாக சன்னதி கட்ட, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, காலபைரவர் சன்னதி அருகே, கோவில் கட்டுமான பணியை துவங்க இடம் தேர்வு செய்தனர். கோவில் உபயதாரர் நிதியாக, 32 லட்சம் ரூபாய் செலவில், கட்டமைப்புக்கான, பூமி பூஜை நேற்று 22 ல், நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன், கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் விழா துவங்கியது. விநாயகர் பூஜை, புண்யாகம், ருத்ர ஜபம் மற்றும் திருமுறை பாராயணம் நடந்தது. பின், ஆகம விதிப்படி, பூமி பூஜை மற்றும் திருப்பணி துவக்க விழா நடந்தது. மொத்தம், 12 அடி நீளத்தில், 16 அடி அகலத்தில், 13 அடி உயரத்தில், கட்டுமான பணி துவங்கியது. பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பச்சமலை முருகன் கோவில், வளாகம் விழாக்கோலம் பூண்டது.