தாங்கி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2393 days ago
தாங்கி:தாங்கி செல்வவிநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம், நேற்று (ஏப்., 22ல்) நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, தாங்கி கிராமத்தில், செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், தீப்பாஞ்சியம்மன் சன்னிதி உள்ளது.
கோவில் மற்றும் சன்னிதிக்கு, நேற்று (ஏப்., 22ல்) காலை, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு கலசப்புறப்பாடு, தொடர்ந்து, 9:45 மணிக்கு, செல்வ விநாயகர் கோவில் கோபுரத்திற்கு, சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றினர்.பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிதரிசனம் செய்தனர்.