உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவாலங்காடு அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவாலங்காடு:அம்மன் கோவிலில், நேற்று (ஏப்., 22ல்) நடந்த தீமிதி விழாவில், பக்தர்கள் காப்பு கட்டி, தீமிதித்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை கிராமத்தில், செங்கழனீர் அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், 12ம் தேதி, 229ம் ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனையும் நடக்கிறதுகாப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், 300க்கும் மேற்பட்டோர், நேற்று (ஏப்., 22ல்) மாலை, 6:30 மணிக்கு, கோவிலின் முன் உள்ள, அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்தனர்.இவ்விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !