உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளித் தேரில் கச்சபேஸ்வரர் உலா

வெள்ளித் தேரில் கச்சபேஸ்வரர் உலா

 காஞ்சிபுரம் : பிரம்மோற்சவ விழாவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், வெள்ளித்தேரில் வலம் வந்தார்.காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம், 13ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்வான, வெள்ளித்தேர் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இரவு, 8:30 மணிக்கு, தேரில் எழுந்தருளிய சுவாமி, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். நாளையுடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !