ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தலைமை நீதிபதி
ADDED :2400 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா தஹில்ரமணி தரிசனம் செய்தார்.
நேற்று (ஏப்., 24ல்) மாலை 4:30 மணிக்கு கோயிலுக்கு வந்த நீதிபதியை தக்கார் ரவிசந்திரன் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் தலைமையில் கோயில் பட்டர்கள் மரியாதை செய்து வரவேற்றனர்.
கோயில் யானைக்கு பழம் கொடுத்த நீதிபதி கொடிமரத்தை வணங்கி பிரகாரம் சுற்றி கோயிலுக்குள் வந்தார். அங்கு ஆண்டாள் சன்னிதியில் தரிசனம் செய்தார். பட்டர்கள் மாலை மற்றும் பரிவட்ட மரியாதை செய்தனர். ஆண்டாள் மாலையணிந்து அழகுபார்த்த கண்ணாடி கிணறு மற்றும் கண்ணாடி மாளிகையை பார்வையிட்டார்.
உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி, விருதுநகர் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா மற்றும் நீதிபதிகள் உடன் வந்தனர்.