உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு

மானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு

மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா 19 ம் தேதி நடந்தது. 9ம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு அப்பன் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளிய வீர அழகருக்கு திருமஞ்சனம் நடந்தது. சந்தனக்காப்புடன் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டன. சுவாமி பல்லக்கில் மேல்கரை வீதிகளில் உள்ள மண்டகப்படிகளுக்கு எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !