நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி
ADDED :2693 days ago
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது.
சித்திரை வியாழனை முன்னிட்டு, நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சுவாமிக்கு, சாய் தபோவனத்தில், சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை சிறப்பு அபிஷேகம், காக்கட் எனும் ஆரத்தி, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. மதியான் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.