உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு ஏகாம்பரநாதர் கோவிலில் திருமுறை முற்றோதுதல் விழா

ஈரோடு ஏகாம்பரநாதர் கோவிலில் திருமுறை முற்றோதுதல் விழா

ஈரோடு: ஈரோடு, தாண்டாம்பாளையத்தில், காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும், சித்திரை மாதத்தில், பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா, இங்கு நடக்கும். நடப்பாண்டு விழா, வரும், 28ல் நடக்கிறது. திருமுறை திருக்காவனம் அறக்கட்டளை அரிகர தேசிகர் சுவாமிகள் தலைமையில், முற்றோதுதல் விழா நடக்கிறது.

முன்னதாக நாளை (ஏப்., 26ல்) மாலை, 5:00 மணிக்கு நால்வர் பெருமக்கள், திருமுறை பண்ணிசையோடு திருவீதி உலா நடக்கவுள்ளது. சிவனடியார்கள், மக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !