உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி பாரியூர் கோவிலில் 14 உண்டியலில் ரூ.17.25 லட்சம் காணிக்கை வசூல்

கோபி பாரியூர் கோவிலில் 14 உண்டியலில் ரூ.17.25 லட்சம் காணிக்கை வசூல்

கோபி: பாரியூர் கோவில் உண்டியல்களில், 17.25 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்தது. கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல், அவ்வப்போது திறந்து, காணிக்கைகள் கணக்கீடு செய்யப்படுகிறது. நேற்று (ஏப்., 25ல்) உண்டியல்கள் திறக்கப்பட்டன.

குண்டம் விழா சமயத்தில் வைத்திருந்த, நான்கு தற்காலிக உண்டியல்கள் மற்றும் 10 நிரந்தர உண்டியல்கள் என, 14 உண்டியல் திறக்கப்பட்டது. தனியார் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். தங்கம், 144 கிராம், வெள்ளி, 117 கிராம், அமெரிக்கா டாலர் மூன்று நோட்டு, மலேசியா ரிங்கிட், இரு நோட்டுகள், சிங்கப்பூர் டாலர் ஒரு நோட்டுகள், சில்லரை காசுகள், ரூபாய் நோட்டுகள் என, 17.25 லட்சம் ரூபாய் கிடைத்தது. கோபி கார்ப்பரேசன் வங்கியில், அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த ஜன.,2ல், 10 உண்டியல்களை எண்ணியபோது, 15.93 லட்சம் ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !