உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி முத்து மாரியம்மன் கோவில் பொங்கல் விழா: அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன்

கொடுமுடி முத்து மாரியம்மன் கோவில் பொங்கல் விழா: அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன்

கொடுமுடி: முத்து மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கொடுமுடி அருகே, தெற்குப்புதுப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், பொங்கல் விழா, கடந்த, 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (ஏப்., 25ல்) பூச்சொரிதல், விளையாட்டு விழா நடந்தது.

இந்நிலையில் முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம் நேற்று (ஏப்., 25ல்)நடந்தது. இதில் திரளான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். பழைய பஸ் ஸ்டாண்ட், காங்கேயம் சாலை, ஒத்தக்கடை வழியே, கோவிலை சென்றடைந்தனர். மஞ்சள் நீராட்டுடன், பொங்கல் விழா, இன்று (ஏப்., 26ல்)நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !