மயிலம் கன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா
ADDED :2400 days ago
மயிலம்: மயிலம் கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களின் குல தெய்வமான கன்னியம்மனுக்கு சித்திரை திருவிழா நடந்தது.அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
மலையடிவாரத்திலுள்ள மயிலாடும்பாறையில் இருந்து பக்தர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பின்னர் நடந்த வழிபாட்டில் ஏராளமான கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.