உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர், டவுன் மாரியம்மனுக்கு கலச வேள்வி பூஜை

திருப்பூர், டவுன் மாரியம்மனுக்கு கலச வேள்வி பூஜை

 திருப்பூர்: திருப்பூர் டவுன் மாரியம்மன் கோவிலில், கலச வேள்வி பூஜை, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.

டவுன் மாரியம்மன் கோவிலில், 23ம் தேதி முதல் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன; 23ல் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் அலங்காரம்; 24ல் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் அலங்காரம்; 25ல், ஸ்ரீடவுன் மாரியம்மன் அலங்கார பூஜைகள் நடந்தன.நிறைவு நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக பூஜை, கலசவேள்வி பூஜை, மகாலட்சுமி அலங்கார பூஜைகள் நடந்தன; தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !