காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் தேரில் பவனி
ADDED :2400 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாள் உற்சவமான நேற்று, (ஏப்., 26ல்)தேரோட்டம் நடந்தது.பெருமாளின், 108 திவ்ய தேசங்களில்
ஒன்றான, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், 19ல், கொடியேற்றத் துடன் துவங்கியது.
தினமும், காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார்.
மூன்றாம் நாள் உற்சவமான, கருடசேவை உற்சவம், 20ல் நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான நேற்று (ஏப்., 26ல்) காலை, தேரோட்டம் நடந்தது.இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளிய அஷ்டபுஜபெருமாள் தேரில் பவனி வந்தார். மே, 1ல் புஷ்ப பல்லக்குடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.