பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவிலில் வரும் 1ல் தேரோட்டம்
ADDED :2400 days ago
பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும், 1ம் தேதி, தேரோட்டம் நடைபெற உள்ளது.
கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில், கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, மே, 1ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. காலை, 7:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளி, வீதியுலா
செல்கிறார். தொடர்ந்து, 2ம் தேதி, மாலை, குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறு கிறது.