புதுச்சேரியில் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் உற்சவம்
ADDED :2400 days ago
புதுச்சேரி: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் (ஏப்., 25ல்)நடந்தது.இதையொட்டி, அன்று காலை 9.00 மணிக்கு மாலை மாற்றும் வைபவம், 10.00 மணிக்கு பழவகை தட்டுகளுடன் சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.காலை 10.30 மணிக்கு அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதில் கரியமாணிக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.