திருப்புல்லாணியில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2400 days ago
திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் மகா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று (ஏப்., 26ல்) காலை 10:00 மணிக்கு பாபு சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் செய்தனர்.மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்கமிட்டியாளர்கள், திருப்புல்லாணி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.