ஸ்ரீவி.,யில் இன்று தெப்ப திருவிழா
ADDED :5004 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்,மார்ச்8-ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாசி மகத்தையொட்டி இன்று தெப்பத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று இரவு வெள்ளோட்டம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் மாசி மகத்தையொட்டி இன்று இரவு நடக்கும் தெப்பவிழாவில் ஆண்டாள் ரெங்கமன்னார் தெப்ப தேரில் பவனி வருதல் நடக்கிறது. நாளை (மார்ச் 9) பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமி தேவி, பெரியாழ்வார், ஸ்ரீனிவாச பெருமாள், 10ம் தேதி ராமர், சீதாதேவி, லட்சுமணன், கிருஷ்ணன், ருக்மணி, சத்யபாமா, சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி, சவுந்தரவல்லி ஆகியோர் பவனி வருவர். தெபப்த்ததையொட்டி நேற்று இரவு வெள்ளோட்டம் நடந்தது.