உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூரில் பன்னிரு தமிழ் வேத மாநாடு

ஓசூரில் பன்னிரு தமிழ் வேத மாநாடு

ஓசூர்: ஓசூரில் நடந்த பன்னிரு தமிழ் வேத மாநாட்டில், 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். ஓசூரில், சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், பன்னிரு தமிழ் வேத மாநாடு நேற்று (ஏப்., 28ல்) நடந்தது.

சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை பொருளாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் கொடியேற்றி வைத்தார். ஓசூர் சிவனடியார் மகளிர் குழுவினர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

அதிகாலை, 5:00 மணிக்கு சிவனடியார்களின் சிவ பூஜை, காலை, திருமுறைகள் ஊர்வலம் நடந்தது. விஜயலட்சுமி அறிவானந்தம், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். காமராஜ் காலனியில் துவங்கிய ஊர்வலம், நேதாஜி ரோடு, ஏரித்தெரு, தேன்கனிக்கோட்டை சாலை, பழைய தொலைபேசி அலுவலக சாலை, தாலுகா அலுவலக சாலை வழியாக சென்றது.
தொடர்ந்து, பன்னிரு தமிழ் வேதங்களில் சிவ வழிபாடு என்ற நூலை அறிவானந்தம் வெளியிட, ஜெயலட்சுமி நாராயண மூர்த்தி, விசாலாட்சி சின்ன மாதையன், கண்ணாமணி, அக்குராஜ், கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பன்னிரு வேதங்கள், நாயன்மார்கள் தலைப்பில், குடியாத்தம் பக்தவச்சலம் பேசினார்.

அதேபோல், புண்ணியங்கள் இரண்டு, இளமையை துறந்து இறைவர் அடி அடைந்தவர், கண்தானம் செய்து கடவுள் அடி அடைந்தவர், அரச போகத்தை துறந்து ஆண்டவர் அடி அடைந்தவர் என, பல்வேறு தலைப்புகளில், புரிசை நடராஜன், முத்தரசு, தெய்வசிகாமணி, நடராஜன் ஆகியோர் பேசினார். 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !